லையோனிங் [Liaoning] எனும் நாட்டின் முதல் அணுசக்தி (Nuclear Powered) விமானம் தாங்கி போர் கப்பலை கட்டமைக்க உள்ளதாக சீன தேசியக் கப்பல் கட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா தனது முதல் விமானம் தாங்கி கப்பலான லையோனிங்கை உக்ரைனிடமிருந்து 2012ல் வாங்கியது.
சீனாவின் இரண்டாவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான Type 001A என்ற விமானம் தாங்கி கப்பல் கடந்த ஆண்டு சீனக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
தற்போது சீனக் கடற்படையானது வழக்கமான எரிபொருள் எண்ணெய்யில் இயங்கும் இரு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் நிமிட்ஜ் வகுப்பு (Nimitz Class) மற்றும் போர்ட் வகுப்பு (Ford Class) விமானம் தாங்கி கப்பல்கள் அணுசக்தி ஆற்றலில் இயங்குகின்றன.
பிரெஞ்ச் கடற்படையின் சார்லஸ்-டி-கௌல்லே (Charless de Gaulle) விமானம் தாங்கி கப்பல் மட்டுமே அணுசக்தி ஆற்றலில் இயங்குகின்ற அமெரிக்காவைச் சேராத விமானம் தாங்கி கப்பலாகும்.