அணுநிலை ஹைட்ரஜனில் இருந்து உருவாகும் ரேடியோ சமிக்ஞைகள்
January 26 , 2023 672 days 337 0
சமீபத்தில், மிகத் தொலைதூர அண்டத்தில் உள்ள அணுநிலை ஹைட்ரஜனில் இருந்து உருவான ஒரு ரேடியோ சமிக்ஞைகள், மாபெரும் மீட்டர் அலை ரேடியோ தொலை நோக்கி (GMRT) மூலம் கண்டறியப்பட்டது.
ஓர் அண்டத்தில் நட்சத்திர உருவாக்கத்திற்குத் தேவையான அடிப்படை மூலப்பொருள் அணுநிலை ஹைட்ரஜன் ஆகும்.
அணுநிலை ஹைட்ரஜன் ஆனது 21 செ.மீ. அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகளை வெளியிடுகிறது.
அலைநீளம் அருகிலுள்ள மற்றும் தொலைதூர அண்டங்களில் உள்ள அணுநிலை வாயுக்களை நேரடியாகக் கண்டறிய உதவும்.
அந்தப் பேரண்டமானது உருவாகி 4.9 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே நிறைவு அடைந்திருந்த போது அண்டத்தினால் வெளியிடப்பட்ட சமிக்ஞைகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
செந்நிற அலை மாற்றம் (ரெட்ஷிஃப்ட்) என்பது பொருளின் இருப்பிடம் மற்றும் இயக்கத்தைப் பொறுத்து சமிக்ஞையின் அலைநீளம் மாறுவதனைக் குறிக்கிறது.
Z என்பதன் அதிக மதிப்பானது அந்தப் பொருள் தொலைதூரத்தில் இருப்பதைக் குறிக்கிறது.