TNPSC Thervupettagam

அணுநிலை ஹைட்ரஜனில் இருந்து உருவாகும் ரேடியோ சமிக்ஞைகள்

January 26 , 2023 543 days 278 0
  • சமீபத்தில், மிகத் தொலைதூர அண்டத்தில் உள்ள அணுநிலை ஹைட்ரஜனில் இருந்து உருவான ஒரு ரேடியோ சமிக்ஞைகள், மாபெரும் மீட்டர் அலை ரேடியோ தொலை நோக்கி (GMRT) மூலம் கண்டறியப்பட்டது.
  • ஓர் அண்டத்தில் நட்சத்திர உருவாக்கத்திற்குத் தேவையான அடிப்படை மூலப்பொருள் அணுநிலை ஹைட்ரஜன் ஆகும்.
  • அணுநிலை ஹைட்ரஜன் ஆனது 21 செ.மீ. அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகளை வெளியிடுகிறது.
  • அலைநீளம் அருகிலுள்ள மற்றும் தொலைதூர அண்டங்களில் உள்ள அணுநிலை வாயுக்களை நேரடியாகக் கண்டறிய உதவும்.
  • அந்தப் பேரண்டமானது உருவாகி 4.9 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே நிறைவு அடைந்திருந்த போது அண்டத்தினால் வெளியிடப்பட்ட சமிக்ஞைகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
  • செந்நிற அலை மாற்றம் (ரெட்ஷிஃப்ட்) என்பது பொருளின் இருப்பிடம் மற்றும் இயக்கத்தைப் பொறுத்து சமிக்ஞையின் அலைநீளம் மாறுவதனைக் குறிக்கிறது.
  • Z என்பதன் அதிக மதிப்பானது அந்தப் பொருள் தொலைதூரத்தில் இருப்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்