TNPSC Thervupettagam

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்

June 18 , 2018 2226 days 649 0
  • செலவு நிதிக் குழுவின் (Expenditure Finance Committee-EFC) சந்திப்பு உலக வங்கியால் நிதியளிக்கப்படும் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (Dam Rehabilitation & Improvement Project-DRIP) செலவுத் தொகை மற்றும் காலக்கெடுவை 2020ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரை ரூ.3466 கோடியாக திருத்தம் செய்துள்ளது.
  • இந்த சந்திப்பானது மத்திய செலவுத் துறையின் (Department of Expenditure) செயலாளருடைய தலைமையின் கீழ் நடைபெற்றது.

  • பரந்த மேலாண்மை அணுமுறையைக் (Wide Management Approach) கொண்டு நிறுவன வலுப்படுத்துதலோடு (Institutional Strengthening) தேர்ந்தெடுக்கப்பட்ட அணைகளில் செயல்பாட்டுச் செயல்திறன் (Operational Performance) மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் பங்களிப்பு கூறுகளுடைய ஓர் மாநிலத் துறைத் திட்டமே (State sector scheme) அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.
  • இத்திட்டமானது உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் (Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation with assistance) கீழுள்ள மத்திய நீர் ஆணையத்தால்  (Central Water Commission-CWC) 2012-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்