பூமியில் இருந்து சுமார் 500 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இரண்டு அண்டங்களின் செயல்பாடுகளை வானியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
இணைவின் விளைவாக ஒன்றிணையும் அண்டத்தின் மையத்திற்கு அருகில் சுழல் வடிவில் இரண்டு கருந்துளைகளின் அளவும் வளர்ந்து கொண்டிருந்தன.
UGC 4211 எனப்படும் அவற்றின் புரவல அண்டங்கள் மோதிய போது அவை ஒன்றுக்கொன்று எதிர்கொண்டன.
அவற்றுள் ஒன்று நமது சூரியனின் நிறையை விட 200 மில்லியன் மடங்கு கொண்டது என்ற நிலையில் மற்றொன்று நமது சூரியனின் நிறையை விட 125 மில்லியன் மடங்கு கொண்டதாகும்.
அறிவியலாளர்கள் இதுவரையில் கண்டிராத வகையில், சுமார் 750 ஒளியாண்டுகள் இடைவெளியில் இந்தக் கருந்துளைகள் ஒன்றாக அமைந்துள்ளன.