புவியீர்ப்பு விசையில் "அண்டங்களில் அலைவு மாற்றம்" என்று கூறப்படும் ஒரு நிகழ்வினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது பேரண்டத்தின் விசித்திரமான நடத்தையை அண்ட அளவில் விளக்க உதவும்.
இதனால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு ஆனது பேரண்டத்தின் வேகமான விரிவாக்கத்தை விளக்கப் போதுமானதாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஐன்ஸ்டீனின் புவியீர்ப்பு மாதிரியானது பெருவெடிப்பு நிகழ்வினைக் கோட்படுத்துவது முதல் கருந்துளைகளைப் புகைப்படம் எடுப்பது வரையிலான அனைத்திற்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
அண்டங்கள் நெடுந்தொலைவில் தோன்றாதொழிதலால் அவை முடுக்குவிக்கப்பட்டு, ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மீறுகின்றன.
அவர்களின் கண்டுபிடிப்புகள் ஆனது, எதிர்பார்க்கப்படும் ஈர்ப்பு நடத்தையில் இருந்து விலகுவதை, குறிப்பாக அபரிமிதமான தொலைவில், அண்டங்களின் அலைவு மாற்றம் போன்ற நிகழ்வைக் குறிக்கின்றன.
பேரண்டங்களின் தூரங்களைக் கடக்கும்போது, சில கூடுதல் பரிசீலனைகள் தேவைப் படுகின்றன.