அண்டத்திற்கு வெளியே அமைந்த கருந்துளையிலிருந்து முனைவாக்க உமிழ்வுகள்
December 17 , 2023 345 days 240 0
குவஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் அண்டத்திற்கு வெளியே அமைந்த கருந்துளையில் ஊடுகதிர் முனைவாக்கத்தினை கண்டறிந்துள்ளனர்.
ஊடுகதிர் (X-கதிர்) முனைவாக்கமானி எனப்படும் நுட்பத்தின் மூலம் பால்வெளி அண்டத்திற்கு அப்பால் இருக்கும் கருந்துளை மூலத்திலிருந்து முனைவாக்க உமிழ்வுகளை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
ஊடு கதிர் முனைவாக்கம் ஆனது, கருந்துளை மூலங்களின் திரளாக்கத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கான வழி முறையை வெளிப்படுத்துகிறது.
கருந்துளைகளுக்கு அருகில் இருந்து கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிய இது ஒரு தனித்துவமான கண்காணிப்பு நுட்பமாகும்.
LMC X-3 சூரியனை விட 10,000 மடங்கு சக்தி வாய்ந்த ஊடு கதிர்களை வெளியிடுகிறது.
இந்த ஊடு கதிர்கள் கருந்துளைகளைச் சுற்றியுள்ள பொருட்களுடன், குறிப்பாக அவை சிதறி அவற்றுடன் தொடர்பு கொள்ளும்போது துருவமுனைவாக்க பண்புகளை (அச்சு மற்றும் கோணம்) மாற்றுகிறது.
சீரற்ற பெருவிண்மீன் தொகுதி X-3 (LMC X-3) என்பது கருந்துளை மற்றும் சூரியனை விட அதிக வெப்பமான, பெரிய மற்றும் அதிக எடை கொண்ட ஒரு "சாதாரண" நட்சத்திரம் கொண்ட இரும விண்மீன் அமைப்பாகும்.
இது பூமியிலிருந்து சுமார் 200,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பால் வெளி அண்டத்தின் துணைக்கோள் மண்டலத்தில் அமைந்துள்ளது.