அண்டார்டிகா பகுதியானது பூமியில் மிகவும் குளிரான, அதிக காற்று வீசும், உயரமான மற்றும் வறண்டக் கண்டத்தில் வாழக்கூடிய தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டுள்ளது.
இந்த இனங்களில் 2 பூக்கும் தாவரங்கள், கடினமான பாசி மற்றும் லைகன்கள், ஏராளமான நுண்ணுயிரிகள், முதுகெலும்பில்லா உயிரிகள் மற்றும் பேரரச மற்றும் அடேலி பெங்குயின் போன்ற இனப்பெருக்கம் செய்யும் கடல் பறவைகள் ஆகியவையும் அடங்கும்.
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை நெருக்கடி காரணமாக இந்த விலங்குகள் மற்றும் தாவரங்கள் அச்சுறுத்தல் நிலைக்கு உட்படுத்தப் படுகின்றன.
தற்போதையப் பாதுகாப்பு முயற்சிகள் அப்படியே மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், 97 சதவீத அண்டார்டிக் நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் கடற்பறவைகளின் எண்ணிக்கை தற்போது முதல் 2100 வரை ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குறையக்கூடும்.
இதற்குச் சிறப்பான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 37 சதவீத உயிர் இனங்கள் குறைந்து விடும் நிலை உள்ளது.
மிக மோசமான சூழ்நிலையில் பேரரசப் பெங்குயின் இனங்கள் 2100 ஆம் ஆண்டளவில் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் உள்ளது.
இந்த நிலையை எதிர்கொள்ளும் ஒரே இனம் இதுதான் என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.