TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் அரிய வகைத் தாது கண்டுபிடிப்பு

February 6 , 2021 1320 days 680 0
  • ஜாரோசைட் என்ற ஒரு அரிய வகைக் கடல்சார் தாதுவானது அண்டார்டிகா பனி மண்டலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இது அண்டார்டிகா பனி மண்டலத்தில் ஆழ் துளையிடுதலின் போது கண்டுபிடிக்கப் பட்டது.
  • இதே போன்று செவ்வாயில் ஜாரோசைட்டின் இருப்பிற்கான ஒரு கோட்பாட்டிற்கு இது ஆதரவளிக்கின்றது.
  • இந்தத் தாதுக்கள் செவ்வாயில் அடர்த்தியான படிவுகளை உருவாக்கும் திறனைக்  கொண்டது.
  • ஏனெனில் செவ்வாய் கோளானது அண்டார்டிகாவை விட அதிக அளவிலான தூசுக்களைக் கொண்டுள்ளது.

ஜாரோசைட்

  • ஜாரோசைட் என்பது செவ்வாயில் உள்ள ஒரு தாதுவாகும்.
  • இது புவியில் மிகவும்  அரிதாகக் காணப்படுகின்றது.
  • இது இரும்பு மற்றும் பொட்டாசியத்தின் ஒரு சல்பேட் ஆகும்.
  • இந்தத் தாதுவானது நீர் மற்றும் அமிலச் சூழ்நிலைகளின் மூலம் உருவாகும் திறன் கொண்டது.
  • இது “ஆப்பர்சூனிட்டி” என்ற ஒரு ஆய்வுக் கலன் மூலம் 2004 ஆம் ஆண்டில் செவ்வாயில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதர ஜாராசைட் தாதுக்களானது வெள்ளி, சோடியம், ஈயம் மற்றும் அம்மோனியம்  ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • இந்தத் தாதுவானது முதன்முறையாக ஆகஸ்ட் பிரெய்த்தப்ட் என்பவரால் 1852 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்