TNPSC Thervupettagam

அண்டார்டிகாவில் ஆழ்கடல் நீரோட்டங்கள்

June 3 , 2023 413 days 248 0
  • அண்டார்டிகா கண்டமானது உலகம் முழுவதும் வெப்பம், கார்பன் மற்றும் ஊட்டச் சத்துக்களை மறுபரவல் (பகிர்வு) செய்யும் "நீரோட்டங்களின் தலைகீழ் சுழற்சி மாற்றம்" எனப்படும் கடல் நீரோட்டங்களின் ஒரு உலகளாவிய வலையமைப்பினை இயக்கி வருகிறது.
  • பூமியின் தட்பவெப்பநிலையை நிலையாக வைத்திருப்பதற்கு இந்த தலைகீழ் சுழற்சி மாற்றம் மிக முக்கியமானதாகும்.
  • ஆக்சிஜன் ஆழ்கடலை அடைவதற்கான முக்கிய வழியும் இதுவே ஆகும்.
  • தலைகீழ் சுழற்சி மாற்றம் ஆனது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (30%) குறைந்துள்ளது என்றும், ஆழ்கடல் ஆக்ஸிஜன் அளவுகள் மிகவும் குறைந்து வருகின்றன என்றும் சமீபத்திய மதிப்பீடுகள் கூறுகின்றன.
  • இது பருவநிலை மாதிரிகள் கணித்ததை விட முன்னதாகவே நடந்து வருகிறது.
  • அடிமட்ட நீரின் ஓட்டம் குறைவதால், ஆழ்கடலுக்கு ஆக்ஸிஜன் பரவல் குறைகிறது.
  • ஆக்சிஜன் நிறைந்த கீழ்மட்ட நீர் அடுக்கு குறைந்து வருவதால், ஆக்சிஜன் குறைவாக இருக்கும் வெப்பமான நீரோட்டத்தினால் அவை மாற்றப் பட்டு, ஆக்ஸிஜன் அளவை அது மேலும் குறைக்கிறது.
  • பெரிய மற்றும் சிறிய கடல்வாழ் விலங்குகள் ஆக்ஸிஜனில் ஏற்படும் வெகுசிலச் சிறிய மாற்றங்களால் கூட பாதிக்கப் படுகின்றன.
  • ஆழ்கடல் விலங்குகள் குறைந்த ஆக்சிஜன் உள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தகவமைக்கப் பட்டுள்ளன, இருப்பினும்  அவை சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் அவசியம் வேண்டும்.
  • ஆக்சிஜன் இழப்புகள் அவற்றினை மற்றப் பகுதிகளில் தஞ்சம் அடையச் செய்யக் கூடும் அல்லது அவற்றின் நடத்தைகளை மாற்றியமைக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்