அதிக அளவு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தினால் அண்டார்டிக் கண்டத்தின் கடல் சார்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (MPA) கண்டத்திட்டுகளின் அமிலத்தன்மை அளவுகள் அதிகரித்து வருகின்றன.
மனித நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகள் கடலோரப் பகுதிகளில் உள்ள கடல் நீரில் செங்குத்து மட்டத்தில் கலப்பதன் விளைவாக அனைத்து நீர் மட்டங்களிலும் கடுமையான அமிலத்தன்மை ஏற்படுகிறது.
இந்த ஆய்விற்கு அண்டார்டிக் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பதிவான கடுமையான 21 ஆம் நூற்றாண்டின் கடல் அமிலமயமாதல் என்று பெயரிடப் பட்டு உள்ளது.
வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை (CO2) உட் கிரகிப்பதன் மூலம் புவி வெப்பமடைதலின் விளைவுகளைத் தணிக்க பெருங் கடல்கள் உதவுகின்றன.
2100 ஆம் ஆண்டில், கடலின் 200மீட்டர் ஆழத்திற்கு pH அளவு 0.36 (மொத்த அளவில்) வரை குறையலாம்.