இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் கடல் நீரோட்டம் ஆனது சமீபத்தியப் பத்து ஆண்டுகளில் வெப்பமிகு பருவநிலை காரணமாக வேகமடைந்துள்ளது.
கடந்த 5.3 மில்லியன் ஆண்டுகளில் அதன் வேகம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒரு புதிய ஆய்வில், அந்த நீரோட்டமானது தனது வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ அல்லது வேகத்தைக் குறைப்பதன் மூலமோ உலகளாவிய பருவநிலைக்கு, மிகப்பெரிய விளைவுகளுடன் கூடிய எதிர்வினைகளை ஆற்றுவதாக கண்டறியப் பட்டு உள்ளது.
அண்டார்டிக் துருவச் சுழல் நீரோட்டத்தின் தற்போதைய இந்தப் பெரு வேகமானது அண்டார்டிகாவின் பனிப்பரவலின் நிலைத் தன்மைக்குச் சாதகமாக இல்லை.
அவை ஏற்கனவே ஆண்டிற்கு 150 பில்லியன் டன்கள் என்ற சராசரி வீதத்தில் பனிப் பரவலை இழந்து வருகின்றன என்ற நிலையில், இது கடல் மட்ட உயர்வுக்கு வழி வகுக்கிறது.
ஒவ்வொரு நொடியும் 165 மில்லியன் முதல் 182 மில்லியன் கன மீட்டர் அளவிலான தண்ணீரை இடம் மாற்றுகின்ற இந்தக் கடல் நீரோட்டமானது மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் அண்டார்டிகாவை வலப்புறமாகச் சுழல்கிறது.