TNPSC Thervupettagam

அண்ணா போலிட்கோவ்ஸ்கயா விருது

October 6 , 2017 2607 days 836 0
  • மறைந்த பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலரான திருமதி.கௌரி லங்கேஷ் அவர்களுக்கு ரா இன் வார் (RAW in WAR – Reach All Women in War) எனும் லண்டனைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப்படும் அண்ணா போலிட்கோவ்ஸ்கயா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • திருமதி. கௌரி லங்கேஷ் இவ்விருதினை பெறும் முதல் இந்திய பத்திரிக்கையாளர் ஆவார்.
அண்ணா போலிட்கோவ்ஸ்கயா
  • அண்ணா போலிட்கோவ்ஸ்கயா ஓர் புகழ்பெற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஆவார்.
  • 1995லிருந்து 2005 வரை நடைபெற்ற இரண்டாம் சென்சேன் போரின் போது செசென்யாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறலையும், ஊழலையும் வெளிகாட்டியதால் இவர் உலகப்புகழ் பெற்றார்.
  • அண்ணா போலிட்கோவ்ஸ்கயா 2006ல் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய படுகொலையின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரா இன் வார் அமைப்பு இந்த விருதினை வழங்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்