அதி இரசாயனத் தன்மை கொண்ட (அழிக்க முடியாத) இரசாயனங்களின் தோற்றம் மற்றும் அவை காணப்படும் இடங்களைக் கண்டறிவதற்காக அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முறையைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த இரசாயனங்கள் அறிவியல் ரீதியாக பெர் மற்றும் பாலிஃப்ளூரோ அல்கைல் பொருட்கள் (PFAS) என அழைக்கப் படுகின்றன.
நீர் எதிர்ப்புத் திறன் கொண்ட, வெப்ப எதிர்ப்புத் திறன் கொண்ட சலவைப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் ஒட்டாதத் தன்மை தொழில்நுட்பங்கள் போன்ற பயன்பாடுகளில் அவை பொதுவாகப் பயனுள்ளதாக இருக்கும்.
அவை சுற்றுச்சூழலில் தங்கி மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் உடல் ஆரோக்கியத்தையும் மிகவும் மோசமாகப் பாதிக்கும் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு வழி வகுக்கின்றன.