TNPSC Thervupettagam

அதி நீர்விலக்குத் தன்மைக் கொண்ட வினையூக்கி

June 24 , 2024 6 days 70 0
  • அசாம், ஒடிசா, சீனா, ஐக்கியப் பேரரசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழுவானது நீர் விலக்குத் தன்மைக் கொண்ட வினையூக்கியை உருவாக்கியுள்ளது.
  • இது "சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற" உயிரி டீசலை உற்பத்தி செய்வதற்கான செலவை தற்போதைய அளவிலிருந்து கணிசமான வகையில் குறைக்கும்.
  • இது உயிரி டீசல் உற்பத்தியின் போது நீர் கொண்ட விளை பொருளினை தாங்கும் வகையிலான "கோள வடிவ அதி நீர்விலக்குத் தன்மை கொண்ட ஒரு செயலாக்கப்பட்ட கார்பன் வினையூக்கியை" அடையும் செயல்முறையாகும்.
  • அதி நீர்விலக்குத் தன்மை கொண்ட வினையூக்கிகள், தாமரை இலைகள் போன்ற இயற்கையான மேற்பரப்புகளில் ஈரம் எதிர்ப்பு அல்லது தண்ணீரை விலக்கும் பண்புகளைப் கொண்டுள்ளது.
  • இந்த வினையூக்கியானது, மிகவும் பயனுள்ளதாக உள்ளது மற்றும் பல முறை மீண்டும் பயன்படுத்தப்படும் வகையிலானது ஆகும் என்ற வகையில் இது வினையூக்கச் செயல்முறையை மிகவும் திறன் மிக்கதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்