மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ‘உயரமான சுற்றுச்சூழல் நிலப் பகுதிகளில் புலி வாழ்விடங்களின் நிலை’ குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- இந்த ஆய்வானது உலகளாவியப் புலிகள் மன்றம் (GTF - Global Tiger Forum), இயற்கைக்கான உலகளாவிய நிதியம், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - IUCN) புலிகளுக்கான ஒருங்கிணைந்த வாழ்விடப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இந்தியா, நேபாளம் & பூடான் ஆகிய அரசாங்கங்கள் ஆகியவற்றினால் மேற்கொள்ளப் பட்டன.
- அதிஉயர சுற்றுச் சூழல் அமைப்பு கூட புலிகளின் வளர்ச்சிக்கு ஒத்துப் போகும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
GTF பற்றி
- உலகில் புலிகளைக் கொண்டுள்ள 13 நாடுகளில் பரவியிருக்கும் புலிகளின் மீதமுள்ள 5 துணை இனங்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய பிரச்சாரம் மீதான அரசாங்கங்களுக்கிடையேயான ஒரே சர்வதேச அமைப்பு GTF ஆகும்.
- GTF 1993 இல் உருவாக்கப்பட்டது. 1997 இல் இது ஒரு சுயாதீன அமைப்பாக உருவெடுத்தது.
- அதன் செயலகம் புது தில்லியில் உள்ளது.