TNPSC Thervupettagam

அதிக உயர கண்காணிப்பிற்கான சிறியரக ஆளில்லா ஆகாய வாகனம்

September 8 , 2018 2142 days 624 0
  • இந்திய தரைப்படை அதிக உயர கண்காணிப்பிற்காக SpyLite என்ற சிறியரக ஆளில்லா ஆகாய விமானத்தை (Unmanned Aerial Vehicle - UAV) தேர்ந்தெடுத்திருக்கின்றது.
  • இந்தச் சிறியரக ஆளில்லா ஆகாய விமானம் இந்தியாவின் சியன்ட் நிறுவனம் (Cyient) மற்றும் இஸ்ரேலின் புளுபேர்டு ஏரோ சிஸ்டம் (Blue Bird Aero System) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சியன்ட் தீர்வுகள் மற்றும் அமைப்புகள் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
  • SpyLite என்ற வாகனம் 4 முதல் 5 மணி நேரம் வரையிலான தாங்கும் சக்தியையும், அதிகபட்ச பறக்கும் உயரமான 30000 அடிகள் என்ற வரம்பையும் கொண்டு, சியாச்சின் பனிமலை மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளின் மீதான நடவடிக்கைகளுக்கு உகந்ததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்