TNPSC Thervupettagam

அதிக எடை கொண்ட பால்கன் விண்கலம்

June 26 , 2019 1980 days 712 0
  • எலோன் மஸ்கினின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது மற்றும் சிக்கலான திட்டமான அதிக எடை கொண்ட பால்கன் விண்கலத்தை விண்ணிற்குச் செலுத்தியுள்ளது.
  • இது பின்வரும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சென்றது.
    • தொலைதூர விண்வெளி அணுக் கடிகாரம் - DSAC (Deep Space Atomic Clock ) ஆனது ஏற்கெனவே வெளிநாட்டு GPS செயற்கைக்கோள்களில் உள்ள அணுக் கடிகாரங்களை விட 50 மடங்கு துல்லியத் தன்மை கொண்டது. இதன் நோக்கம் ஒரு புவி நேரத்தைச் சார்ந்திருக்காமல் தன்னகத்தே விண்கலப் பயணத்திற்கு உதவுவதாகும்.
    • ASCENT (Advanced Spacecraft Energetic Non-toxic Propellant) பசுமை எரிபொருள் - ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் ஹைடர்செயின் எரிபொருள் மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. மேம்படுத்தப்பட்ட விண்கல ஆற்றலுள்ள நச்சுத் தன்மையற்ற உந்து பொருளானது குறிப்பிடத்தக்க அளவில் மாசுபாட்டைக் குறைக்கின்றது.
    • சூரிய ஒளியின் மூலம் பயணம் - இது சூரிய ஒளியால் மட்டுமே செலுத்தப்படும் முதல் சுற்றுப்பாதை விண்கலமாக மாற முற்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்