TNPSC Thervupettagam

அதிக எடையுள்ள பள்ளி புத்தகப் பைகள்

May 5 , 2019 1905 days 584 0
  • கர்நாடக மாநில அரசு அதிக எடையுள்ள பள்ளிப் புத்தகப் பைகளை எடுத்துச் செல்வதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளிலிருந்து பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக விதிமுறைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • குழந்தையின் எடையில் 10 சதவிகிதத்திற்கும் மேலே பள்ளிப் புத்தகப் பைகளின் எடை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் புத்தகப் பைகளின் எடை ஏறத்தாழ 1.5 கிலோ கிராமிலிருந்து 2 கிலோ கிராமிற்குள்ளாக மட்டுமே இருக்க வேண்டும்.
  • மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் பள்ளி புத்தகப் பைகளின் எடையானது 2 கி.கி.லிருந்து 3 கி.கி. வரை மட்டுமே இருக்க வேண்டும்.
  • பள்ளிகள் ஒவ்வொரு மாதத்தின் 3-வது சனிக்கிழமையை “புத்தகப் பைகளற்ற தினமாக” கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்