TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான இளநிலை மருத்துவக் கல்லூரிகள்

October 18 , 2022 772 days 485 0
  • இந்தியா 2011-12 முதல் 2021-22 வரையிலான காலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் சராசரி வருடாந்திர அதிகரிப்பினை 5.9% என்ற அளவில் கண்டுள்ளது.
  • இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும்.
  • 2021-22 ஆம் ஆண்டில், தமிழ்நாடு (11.4%) மற்றும் உத்தரப் பிரதேசம் (10.9%) ஆகிய மாநிலங்கள் பொது மற்றும் தனியார் இளநிலை மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் அதிக பங்கைக் கொண்டிருந்தன.
  • அவற்றைத் தொடர்ந்து கர்நாடகா (10.3%) மற்றும் மகாராஷ்டிரா (10.1%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • 2011-12 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்திற்கான சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் படி, அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களானது 155% உயர்ந்து 97% அதிகரித்துள்ள தனியார் மருத்துவ இடங்களை விட அதிகமாக உள்ளது.
  • அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளி மருத்துவர்களைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னணி இடத்தில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன என்றும் இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
  • 2017-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தனியார் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் தமிழ்நாடு (4,110 இடங்கள்), கர்நாடகா (3,004 இடங்கள்), மகாராஷ்டிரா (2,775 இடங்கள்), குஜராத் (2,170 இடங்கள்), தெலுங்கானா (1,900 இடங்கள்) மற்றும் பீகார் (1,525 இடங்கள்) போன்ற மாநிலங்களில் அதிகபட்ச அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது.
  • இந்தியாவின் மொத்த சுகாதாரப் பணியாளர்களில் கிராமப்புறத்தினைச்  சேர்ந்த நபர்கள் 66% ஆக இருக்கும் அதே சமயத்தில், ​​கிராமப்புறங்களில் 33% சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே சேவை வழங்கும் வகையில் தயாராக உள்ளனர்.
  • ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதத்தினைக் கொண்டுள்ளன.
  • ஆனால் அவை இந்தியாவின் மொத்த முதுநிலை கல்விக்கான இடங்களில் 37% (2021-22 ஆம் ஆண்டில் 46,118 இடங்களில் 17,038) கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்