TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான தடையற்ற அணுகல் கொண்ட நுகர்வோர்

November 28 , 2024 46 days 83 0
  • மின்சார ஆற்றல் பரிமாற்றச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கும் தடையற்ற நுகர்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • தடையற்ற அணுகல் என்ற ஒரு கருத்தாக்கமானது, மிக அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள், மாநில உற்பத்தி அமைப்புகளைச் சார்ந்து இல்லாமல் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மின்சாரத்தை வாங்க நன்கு வழி வகுக்கிறது.
  • இந்திய ஆற்றல் பரிமாற்றச் சந்தை லிமிடெட் (IEX) நிறுவனத்தில் 5,244 தடையற்ற அணுகல் கொண்ட நுகர்வோர் உள்ளனர், மேலும் இந்த நுகர்வோர் பெரும்பாலும் தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய சில மாநிலங்களில் உள்ளனர்.
  • தமிழ்நாடு மாநிலமானது, மின்சார ஆற்றல் பரிமாற்றச் சந்தையில் (IEX) மொத்தம் 1,247 தடையற்ற அணுகல் பெற்ற நுகர்வோர்களைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்