அதிக எண்ணிக்கையிலான பெண் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்
November 23 , 2024 52 days 99 0
மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான பெண் மன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) உள்ளனர்.
இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய சில மாநிலங்கள் இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற மாநிலங்கள் ஆகும்.
இந்தியாவில் 17 மாநில அரசுகளானது, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டு உள்ள குறைந்தபட்சம் 33% இட ஒதுக்கீட்டிற்கும் மேலாகப் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான சட்டத்தினை இயற்றியுள்ளன.
இந்தியாவில் உள்ள உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களில் சுமார் 46% பேர் பெண்கள் ஆவர்.
பாட்னா, சிம்லா, ராஞ்சி மற்றும் புவனேஸ்வர் உட்பட, செயல்பாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட 21 தலைநகரங்களுள் 19 தலைநகரங்களில், இந்த எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.