அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தல்
April 3 , 2025 8 hrs 0 min 29 0
அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறை / லைட் ஃபிஷிங் முறையானது மீன் மற்றும் கணவாய் மீன்களை மேற்பரப்புக்கு ஈர்க்க அதிக சக்தி வாய்ந்த செயற்கை விளக்குகளைப் பயன்படுத்தும் நுட்பமாகும்.
இந்த நுட்பம் ஆனது, மிகப் பெரும்பாலும் இளம் மீன்கள் மற்றும் இலக்கு அல்லாத உயிரினங்களை ஈர்த்து அதிகப்படியான மீன்பிடித்தலுக்கு வழிவகுக்கிறது.
இம்முறையானது 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் (EEZ) தடைசெய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில், பிராந்திய நீர்நிலைகளிலும், விதிகள் உள்ள இடங்களிலும் இந்த மீன்பிடித்தல் முறை முற்றிலுமாக தடை செய்யப் படவில்லை.