2022 ஆம் ஆண்டு நடப்பு நிதியாண்டில் அதிகளவு கடன் பெறும் மாநிலங்களில் தமிழக அரசு முன்னிலையிலுள்ளது.
ஒட்டு மொத்தமாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் – பிப்ரவரி மாத காலத்தில் மாநில மேம்பாட்டுக் கடன்கள் எனப்படும் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் 65,400 கோடி நிதியை தமிழகம் திரட்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இருந்த 79500 கோடி என்ற கடன் அளவினை விட இது 18 சதவிகிதம் குறைவாகும்.
தமிழகத்தையடுத்து, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.