TNPSC Thervupettagam

அதிக சுயாட்சியைக் கோரும் மணிப்பூர்

September 8 , 2023 316 days 262 0
  • மணிப்பூரில் நிலவி வரும் மோதலைத் தீர்க்கவும், குக்கி இனத்தவரை அமைதிப் படுத்தச் செய்வதற்காகவும், தற்போதுள்ள தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டுச் சபைகளுக்கு கூடுதல் தன்னாட்சி வழங்கப் பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசு முன்மொழிந்துள்ளது.
  • குக்கி இனத்தவர் முன்வைத்த “தனி நிர்வாகம்” என்ற கோரிக்கையை அம்மாநில அரசு எதிர்க்கிறது.
  • ஆங்கிலேயர்கள் அசாம் மாநிலத்தின் மலைப்பகுதிகளை 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் மூலம் "முழுவதும் விலக்கப்பட்ட" மற்றும் "பகுதியளவு விலக்கப்பட்ட" பகுதிகளாகப் பிரித்தனர்.
  • தற்போது, ஆறாவது அட்டவணையின் கீழ் வடகிழக்கு இந்தியாவில் அசாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று, திரிபுராவில் ஒன்று என 10 தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டு சபைகள் உள்ளன.
  • மணிப்பூரில் ஆறு தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டு சபைகள் உள்ளன ஆனாலும் இவை 1971 ஆம் ஆண்டில் பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்தன.
  • 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றமானது மணிப்பூர் (மலைப் பகுதிகள்) மாவட்டச் சபை என்ற சட்டத்தினை நிறைவேற்றியதன் மூலம் மணிப்பூரின் மலைப் பகுதிகளில் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டுச் சபைகளை நிறுவ வழி வகுத்தன.
  • இந்தப் பகுதிகள் அதன் புவியியல் பகுதியில் 90% உள்ளடக்கிய நிலையில், இந்தப் பகுதிகளில் நாகாக்கள், குக்கிகள், ஜோமிகள், ஹுமார்கள் போன்றப் பழங்குடியினர் வசிக்கின்றனர்.
  • அப்போது மணிப்பூர் ஒன்றியப் பிரதேசமாக இருந்தது.
  • மணிப்பூர் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டு சபைகளானது இச்சட்டத்தின் விதிகள் காரணமாக அந்த மாநிலச் சட்டமன்றத்தை சார்ந்து உள்ளன.
  • அம்மாநிலச் சட்டமன்றத்தில் 2000 ஆம் ஆண்டில் ஒரு திருத்த மசோதா மூலம் கொண்டு வரப்பட்ட அதிக தன்னாட்சிக்கான சில திருத்தங்கள், 2006 ஆம் ஆண்டில் மற்றொரு மசோதாவின் மூலம் ரத்து செய்யப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு முதல், இந்தப் பகுதியில் உள்ள பிரிவினரின் எதிர்ப்பின் காரணமாக, தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டுச் சபைகளுக்கு அதிக தன்னாட்சி வழங்கப்படச் செய்வதற்கான திருத்தங்களை முன்வைக்கும் ஒரு மசோதா சட்டசபையில் அறிமுகப் படுத்தப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்