மெர்சர் நிறுவனம் ஆனது, சமீபத்தில் ‘வாழ்க்கைச் செலவினம் மிக்க நகரங்களின் தரவரிசை 2024’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹாங்காங் நகரம் ஐந்தாவது முறையாக உலகின் அதிக செலவினம் மிக்க நகரமாக இடம் பெற்றுள்ளது.
மற்றொரு ஆசிய பொருளாதார மையமான சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐரோப்பா, இலண்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள நகரங்கள், நியூயார்க் நகரம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற அமெரிக்க நகரங்களுடன் இணைந்து முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
உலகத் தரவரிசையில் மும்பை 136வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதில் புது டெல்லி 165வது இடத்திலும், பெங்களூரு 195வது இடத்திலும் உள்ளது.
அபுஜா, நைஜீரியா (226), லாகோஸ், நைஜீரியா (225) மற்றும் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் (224) ஆகியவை குறைந்த செலவினம் மிக்க நகரங்களாகும்.