ஏழு மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் ஆனது 1 பில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுகின்றன என்ற நிலையில் இதில் டெக்சாஸைத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களும் சீனாவில் அமைந்துள்ளன.
பூமியின் மொத்தக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் மாசுபாடு ஆனது சுமார் 0.7% அதிகரித்து 61.2 பில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது என்பதோடு அவற்றின் உமிழ்வு மிகக் குறுகிய காலமே இருந்தாலும், கூடுதல் ஆற்றல் வாய்ந்த மீத்தேன் 0.2% உயர்ந்துள்ளது.
சுமார் 256 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயு உமிழ்வுடன் ஷாங்காய் நகரம் அனைத்து நகரங்களையும் முந்தியுள்ளதோடு கொலம்பியா அல்லது நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த நகரங்களை விட அதிகமான உமிழ்வினை வெளியிடுகிறது.
சீனா, இந்தியா, ஈரான், இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் 2022 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பதிவான உமிழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வெனிசுலா, ஜப்பான், ஜெர்மனி, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய சில நாடுகளில் மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளது.