இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது அதிக மகசூல் தரும் புதிய கோதுமை விதை ரகத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
HD 3386 எனப்படும் புதிய விதை ரகம் ஆனது, சமீபத்தில் மத்திய விதைக் குழுவினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வடமேற்குப் பகுதியின் முக்கிய கோதுமைப் பகுதியில் பெரும்பாலும் பதிவாகியுள்ள இது மஞ்சள் மற்றும் இலைத் துரு நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
இது 2010 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தற்போது பயன்படுத்தப்படும் HD2967 விதைக்கு மாற்றாக இதனை அறிமுகப் படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மகசூலைப் பொறுத்தவரை தற்போதுள்ள ரகம் ஏக்கருக்கு 22 குவிண்டால் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது அதே நேரத்தில் இந்தப் புதிய ராகமானது ஏக்கருக்கு 25 குவிண்டால் உற்பத்தித் திறன் கொண்டது.