TNPSC Thervupettagam

அதிக மகசூல் தரும் கோதுமை வகை - HD 3386

May 15 , 2024 196 days 173 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது அதிக மகசூல் தரும் புதிய கோதுமை விதை ரகத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • HD 3386 எனப்படும் புதிய விதை ரகம் ஆனது, சமீபத்தில் மத்திய விதைக் குழுவினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வடமேற்குப் பகுதியின் முக்கிய கோதுமைப் பகுதியில் பெரும்பாலும் பதிவாகியுள்ள இது மஞ்சள் மற்றும் இலைத் துரு நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
  • இது 2010 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தற்போது பயன்படுத்தப்படும் HD2967 விதைக்கு மாற்றாக இதனை அறிமுகப் படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • மகசூலைப் பொறுத்தவரை தற்போதுள்ள ரகம் ஏக்கருக்கு 22 குவிண்டால் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது அதே நேரத்தில் இந்தப் புதிய ராகமானது ஏக்கருக்கு 25 குவிண்டால் உற்பத்தித் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்