TNPSC Thervupettagam

அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தை

November 21 , 2024 3 days 31 0
  • மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) ஆனது 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவில் குறுகிய கால மின்சாரச் சந்தை குறித்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • CERC ஆனது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தையினை (HP-DAM) அறிமுகப்படுத்த தனது ஒப்புதலை அளித்தது.
  • தற்போதுள்ள விலை உச்ச வரம்பு மீதான ஒரு காரணமாக பிந்தைய நாள் மதிப்பின் அடிப்படையிலான சந்தையில் பங்கேற்க முடியாத மிகவும் அதிக விலை உருவாக்கத் துறைகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட சந்தைப் பிரிவு ஆனது அறிமுகப் படுத்தப் பட்டது.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ஆனது, மின் பரிமாற்றங்களில் அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தையிலிருந்து மின்சாரத்தை அதிகம் வாங்கும் நிறுவனமாக இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்திய எரிசக்தி சந்தையில் அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்த அளவு சுமார் 32.07 மில்லியன் அலகுகள் (MU) ஆகும்.
  • இதில் TANGEDCO நிறுவனத்தின் பங்கு 20.98 MU அல்லது 65.43% ஆகும்.
  • இந்த அறிக்கையின்படி, TANGEDCO நிறுவனத்தின் சராசரி கொள்முதல் சக்தியானது ஓர் அலகுக்கு 17.65 ரூபாயாக இருந்தது.
  • மாநிலத்தின் மின்சாரத் தேவையானது மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற வரலாறு காணாத வகையில் புதிய சாதனையை எட்டியது.
  • ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தினசரி நுகர்வு 454.32 MU என்ற புதிய உச்சத்தை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்