அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு தன்னாட்சி நிறுவனமான சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை (USAID) ஆனது, 'அதிக வெப்பம் குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டினை' காணொளி வாயிலாக ஏற்பாடு செய்தது.
சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை (USAID) என்பது குடிமக்களுக்கான வெளிநாட்டு உதவி மற்றும் மேம்பாட்டு உதவிகளை நிர்வகிப்பதை ஒரு முதன்மை நோக்கமாகக் கொண்டதாகும்.
2023 ஆம் ஆண்டு ஆனது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகும்.
இந்த நிகழ்வானது, பாகிஸ்தான் முதல் துனிசியா வரையிலும், துனிசியாவிலிருந்து டெக்சாஸ் வரையிலுமான அனைத்து கண்டத்திலும் அதிக வெப்ப அலைகள் பதிவான நிகழ்வுடன் ஒன்றி வந்தது.