வியாழன் கோளானது, அதைச் சுற்றி 12 புதிய துணைக் கோள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதனையடுத்து, அதிகத் துணைக்கோள்களைக் கொண்ட ஒரு கிரகமாக மாறியது.
மொத்தத்தில் 92 துணைக் கோள்களை கொண்ட இந்தக் கிரகம் சனிக்கோள் கொண்டு இருக்கும் துணைக் கோள்களின் எண்ணிக்கையினை மிஞ்சியுள்ளது.
சனிக் கோளானது, 83 உறுதிப்படுத்தப் பட்ட துணைக் கோள்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அவை 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் ஹவாய் மற்றும் சிலி ஆகிய இடங்களில் உள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டதோடு, அவற்றின் சுற்றுப் பாதைகள் ஆனது அதற்குப் பிந்தைய ஆய்வுகளின் அடிப்படையிலும் உறுதிப் படுத்தப் பட்டது.
வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களின் துணைக் கோள்கள் சிறிய உருவ அளவு கொண்டவையாகும்.
யுரேனஸ் 27 துணைக் கோள்களையும், நெப்டியூன் 14 துணைக் கோள்களையும், செவ்வாய் இரண்டு மற்றும் பூமி ஒரு துணைக் கோளினையும் கொண்டுள்ளன.
வெள்ளி மற்றும் புதன் ஆகிய கோள்களுக்குத் துணைக் கோள்கள் இல்லை.