TNPSC Thervupettagam

அதிகபட்ச சூரியச் செயல்பாட்டு நிலை 2024

October 26 , 2024 27 days 66 0
  • தற்போதைய சூரிய சுழற்சியில் சூரியன் அதன் "மிகவும் அதிகபட்சச் செயல்பாட்டுக் காலக் கட்டத்திற்குள்" நுழைந்துள்ளது.
  • அதிகபட்ச சூரிய ஒளி என்பது சூரியக் கரும்புள்ளிகள் மற்றும் சூரிய நிகழ்வுகளின் குறிப்பிடத் தக்க அதிகரிப்பினைக் கொண்டு வகைப்படுத்தப்படும் ஒரு செயல்பாட்டு நிலையாகும்.
  • சூரிய சுழற்சியானது மிக குறைந்த மற்றும் அதிகபட்ச செயல்பாட்டுக் காலங்களுக்கு இடையிலான சூரியனின் மிகவும் இயற்கையான ஏற்ற இறக்கச் செயல்பாடுகளைக் குறிக்கிறது.
  • ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரியனின் இந்த உச்சகட்ட செயல் பாட்டின் போது - பூமியின் உள்ள வடக்கு மற்றும் தென் துருவங்கள் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவது போலவே - சூரியனின் காந்தத் துருவங்கள் இடம் மாறுகின்றன.
  • அதிகபட்சச் செயல்பாட்டுக் கட்டத்தில், சூரியன் ஆனது ஒளி, ஆற்றல் மற்றும் சூரிய கதிர்வீச்சு ஆகியவற்றின் மாபெரும் வெடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது.
  • சூரிய உமிழ்வுகள் பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்வதன் விளைவாக புவி காந்தப் புயல்கள் உருவாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்