TNPSC Thervupettagam

அதிகபட்ச பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு – 2024

February 9 , 2024 162 days 257 0
  • மத்திய நிதிநிலை அறிக்கையின் ஒரு தனி அறிக்கையானது, பெண்கள் மற்றும் சிறுமிகளை இலக்காகக் கொண்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்களின் மீதான மதிப்பீட்டை வழங்குகிறது.
  • மத்திய நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக வருடாந்திரப் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையை (GBS) வெளியிடும் நடைமுறை 2005-06 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • பல்வேறு அமைச்சகங்களில் அமைக்கப்படும் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பிரிவுகள் பற்றிய சாசனம் ஆனது 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இந்த ஆண்டு, பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட மொத்த ஒதுக்கீடு 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், இது மொத்தச் செலவினங்களில் சுமார் 6.5% ஆகும்.
  • இது முந்தைய ஆண்டிற்கான பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்டதை விட சுமார் 40% அதிகம் என்பதோடு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகமான உயர்வும் ஆகும்.
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டின் 87% அதிகரிப்பானது 7 அமைச்சகங்கள்/துறைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான தனது ஒதுக்கீடுகளை நன்கு அதிகரித்ததன் காரணமாகப் பதிவாகியுள்ளது.
  • மொத்தப் பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் சுமார் 35%, அதாவது 1 லட்சம் கோடி ரூபாய் ஆனது, MGNREGA திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது பெரிய ஒதுக்கீடு ஆனது சுமார் 40,000 கோடி ரூபாய் அல்லது பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் ஒதுக்கீட்டில் 13% ஆனது கல்வி அமைச்சகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஜல் ஜீவன் திட்டத்திற்கு 36,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் திட்டங்களுக்குச் சுமார் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் இவை இரண்டிற்கும் தலா 11%-12% பங்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
  • பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்திற்கான சுமார் 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீடானது பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் 8.5% பங்காகும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது பாலினம் சார்ந்த நிதிநிலை அறிக்கையின் கீழான ஒதுக்கீட்டில் 6.6% பங்கினைப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்