TNPSC Thervupettagam

அதிகபட்ச மின்னாற்றல் பற்றாக்குறை

October 5 , 2023 289 days 219 0
  • தமிழ்நாடு மாநிலமானது, 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாத காலத்தில் வர உள்ள உச்ச கட்ட மின் தேவைக் கால கட்டத்தில் 114 மில்லியன் அலகு (MU) மின் பற்றாக் குறையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், அதே காலக் கட்டத்தில் அதிகபட்சமாக 1,200-1,600 மெகாவாட் ஆற்றல் பற்றாக் குறையை தமிழகம் எதிர்கொள்ளக்கூடும்.
  • தமிழகத்தின் ஒரு உச்ச கட்ட மின் தேவையானது, 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 20,806 மெகாவாட்டாகவும், மே மாதத்தில் 19,785 மெகாவாட்டாகவும், ஜூன் மாதத்தில் 19,800 மெகாவாட்டாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இம்மாநிலத்தின் ஆற்றல் தேவையானது 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 12,144 மில்லியன் அலகாகவும், மே மாதத்தில் 11,689 மில்லியன் அலகாகவும், ஜூன் மாதத்தில் 12,029 மில்லியன் அலகாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்