TNPSC Thervupettagam

அதிகபட்ச வழக்குகளுக்குத் தீர்ப்பு – மதராஸ் உயர்நீதி மன்றம்

November 20 , 2023 243 days 212 0
  • சென்னை உயர்நீதிமன்றம் ஆனது, 2022 ஆம் ஆண்டில் 114% என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையிலான வழக்கு தீர்வு விகிதத்துடன் (CCR) அதிக வழக்குகளைத் தீர்த்து வைத்த உயர்நீதிமன்றம் என்ற சாதனையினைப் படைத்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் வழக்கு தீர்வு விகிதம் 109% ஆகப் பதிவு செய்யப்பட்டது.
  • 100 சதவீதத்திற்கு மேலான வழக்கு தீர்வு விகிதம் என்பது, ஒரு நீதிமன்றம் ஆனது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அங்கு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஈடான  வழக்குகள் அதே ஆண்டில் தீர்த்து வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகளைத் தீர்ப்பதாகும்.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதிகளுக்கு இடையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு மற்றும் அதன் மதுரை அமர்வு ஆகியவற்றில் 1,61,810 வழக்குகளின் பதிவு செய்யப்பட்டன.
  • உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டில் 106.21 சதவீதமும், 2019 ஆம் ஆண்டில் 112.77% சதவீதமும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் 103.23 சதவீதமும் வழக்கு தீர்வு விகிதம் பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்