TNPSC Thervupettagam

அதிகப்படியான காவிரி நீர்

June 10 , 2022 902 days 492 0
  • தொடர்ந்து நான்காவது ஆண்டாக, முடிவடைந்த 2021-22 நீர் ஆண்டில் காவிரி நீரின் அதிக அளவைத் தமிழ்நாடு பெற்றுள்ளது.
  • மாதாந்திர மீள் நிரப்பும் அடிப்படையில், நவம்பர் மாதம்  71.57 டிஎம்சியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • 2021 ஜூன்  முதல் 2022 மே  வரை மாநிலம் சுமார் 281 டிஎம்சி தண்ணீரைப் பெற்றுள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில், பெற்ற நீரின் அதிகப் படியான அளவு 228.18 டிஎம்சி ஆகும்.
  • இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நிர்ணயித்த 177.25 டிஎம்சி அளவை விடக் கூடுதலாக 103.8 டிஎம்சி அளவு நீர் கிடைத்துள்ளது.
  • 12.76 டிஎம்சிக்குப் பதிலாக 44 டிஎம்சியைப் பெற்ற ஒரு நிலையில் தமிழகம் 2022 ஆம் ஆண்டின் ஜனவரி - மே மாதங்களில் எதிர்பாராத “வரவை” பெற்றது.
  • 2022 மே மாதம் மாநிலத்தின் நிகர அளவு இருப்பாக  22.96 டிஎம்சியாக நீரைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்