ஜம்மு & காஷ்மீரில் உள்ள உதம்பூர்-தோடா-கதுவா நாடாளுமன்றத் தொகுதியானது, இந்தியாவின் 550 நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே அதிகம் மேம்பாடு அடைந்த ஒரு தொகுதியாகும்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) உட்பட மூன்று மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட இந்தியாவின் ஒரே தொகுதி இதுவாகும்.
இந்தத் தொகுதியானது 'ஊதாப் புரட்சி'யின் பிறப்பிடமாக விளங்கியதன் மூலம் இந்தப் புகழைப் பெற்றுள்ளது.
உலகின் மிக உயரமான இரயில்வேப் பாலமான - செனாப் பாலம் - மற்றும் உலகின் மிக நீளமானச் சுரங்கப் பாதையான - டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சுரங்கப் பாதை ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன.