TNPSC Thervupettagam

அதிகளவிலான இலைகளின் அழிவு

August 31 , 2023 456 days 253 0
  • நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்தச் சமீபத்திய ஆய்வறிக்கையானது, பருவநிலை மாற்றத்தினால் வெப்பமண்டலக் காடுகளுக்கு ஏற்படும் புதிய ஆபத்துகளை எடுத்து உரைக்கிறது.
  • இந்த உயரும் வெப்பநிலையானது “அதிகளவிலான இலைகளின் அழிவு” எனப்படும் ஒரு நிகழ்வுக்கு வழி வகுக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
  • இந்த அறிக்கையானது, வெப்பமண்டல மரங்களின் இலைகள் மிக அதீத வெப்பத்தால் மடியும் அல்லது ஒளிச்சேர்க்கையை நிறுத்தும் என கூறுகிறது.
  • பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சிறிய வெப்பநிலை மாற்றங்கள் கூட தாவர இனங்களைக் கணிசமான அளவில் பாதிக்கக் கூடும்.
  • சில வெப்பமண்டலப் பகுதிகள் ஒரு தசாப்தத்திற்கு சராசரியாக 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிப்பை எதிர்கொண்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஒரு இலையின் வெப்பநிலை ஒரு மாறுநிலை வரம்பை (சுமார் 46.7 டிகிரி செல்சியஸ்) தாண்டினால், ஒளிச் சேர்க்கை நின்று விடும் என்பதோடு, மேலும் அத்தகைய வெப்ப நிலையில் இலைகளின் வெளிப்பாடு நீடித்தால் இலைகள் மடியக் கூடும்.
  • நீண்ட காலமாக அதிக வெப்பநிலையிலான வெளிப்பாடு வெப்ப மண்டலக் காடுகளின் அழிவிற்கு வழி வகுக்கும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்