ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான குழு (UNCRC) அதிகாரப் பூர்வ வழிக்காட்டுதல்கள். 26 என்ற பொது வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளின் உரிமைப் பிரயோகத்தின் மீது சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்படும் சில பாதகமான தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கான சட்டப் பூர்வக் கட்டமைப்பினை இது வழங்குகிறது.
இது தற்போதைய தலைமுறைக்குத் தூய்மையான, வளமான மற்றும் நிலையான உலகினை உறுதி செய்வதோடு, எதிர்காலச் சந்ததியினருக்காக என்று அதனை நன்கு பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் வணிகங்களால் ஏற்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான தீங்குகளின் தாக்கத்திலிருந்து குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உறுப்பினர் நாடுகளுக்கு வலியுறுத்தப் பட்டு உள்ளது.