TNPSC Thervupettagam

அதிகாரப்பூர்வ இலச்சினை – மேற்கு வங்கம்

January 7 , 2018 2543 days 878 0
  • மத்திய அரசால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அதிகாரப்பூர்வ இலச்சினையை மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ளது.
  • மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜியால் இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த இலச்சினை புகழ்பெற்ற கலைஞரான ஜோகன் சௌத்ரியின் தலைமையிலான மாநில அரசினுடைய மதிப்பீட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
  • மேற்கு வங்கத்தின் இப்புதிய இலச்சினையானது தேசிய இலச்சினையான அசோகத்தூணையும் மாநிலத்தின் “பிஸ்வா மங்களா “நிறுவனத்தின் அடையாளச் சின்னத்தையும் கொண்டுள்ளது.
  • மாநிலத்தின் கைவினைப் பொருட்கள் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கு வங்க அரசால் ஏற்படுத்தப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனமே (MSME) பிஸ்வா மங்களா ஆகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்