பூமியின் ஆழ்பகுதியில், எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு உயரமான மலைகள் இருப்பது சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றின் உயரம் 24 மைல்களுக்கு (38 கிலோமீட்டர்) மேல் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்தக் குழுவானது அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களின் தரவுகளைப் பயன்படுத்தி, அதிகுறை திசைவேக மண்டலங்கள் எனப்படுகின்ற இந்தப் பிரமாண்ட மலைத் தொடர்களை அடையாளம் கண்டுள்ளது.
அவை பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் தோராயமாக 2,900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருவம் மற்றும் மூடகத்திற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் அமைந்து உள்ளன.