TNPSC Thervupettagam

அதிசக்தி வாய்ந்த பீட்டா டைட்டானியம் உலோகக் கலவை – Ti-10V-2Fe-3Al

July 22 , 2021 1131 days 467 0
  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அதிக சக்தி வாய்ந்த (வலுவான) டைட்டானியம் என்ற ஒரு உலோகக் கலவையினை உருவாக்கி உள்ளது.
  • விண்வெளிக் கட்டமைப்புப் பயன்பாட்டிற்காக வேண்டி இந்த உலோகக் கலவை உருவாக்கப் பட்டுள்ளது.
  • டைட்டானியம் உலோகக் கலவையானது அவற்றின் நீர்த்தன்மை, அதிக வலிமை, உடையாத் தன்மை மற்றும் ஆற்றல் போன்ற பண்புகளுக்காக தனித்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • மேலும் எஃகுகளுடன் ஒப்பிடுகையில் இது மேன்மையான துரு எதிர்ப்புத் திறனைக்  கொண்டு இருப்பதால் இந்த உலோகக் கலவையானது ஒப்பீட்டளவில் குறைந்த ஆயுட்காலச் செலவினை கொண்டுள்ளது.
  • இது இரும்பு, வனேடியம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் ஒரு கலவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்