பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவு அல்லது 'அதிநுண்ணிய' அளவில் ஒரு புதிய வகை அதிநுண்ணிய மீ மின் தேக்கியினை உருவாக்கியுள்ளனர்.
இது அதிகளவு ஆற்றலைச் சேமிக்கும் திறன் கொண்டது.
எனவே, சிறிய மின்னணுச் சாதனங்களில் இதனைப் பயன்படுத்த எளிதானது என்பதோடு இது மின்கலங்களின் அவசியத் தேவையை நீக்குவதோடு, ஒரு சாதனம் நீண்ட நேரம் மின்னேற்றத்துடன் இருக்கவும் செய்கிறது.
பொதுவான மின்கலங்கள், காலப்போக்கில் மின்னாற்றலினைச் சேமிக்கும் திறனை இழக்கின்றன, எனவே ஒரு இவற்றிற்கென வரையறுக்கப்பட்ட காலாவதி தேதி உள்ளது.
ஆனால் மின்தேக்கிகள், அவற்றின் வடிவமைப்பின் மூலம் மின்னூட்டத்தினை அதிக நேரம் சேமிக்கக் கூடியவை ஆகும்.
மீ மின்தேக்கிகள் மின்கலங்கள் மற்றும் மின்தேக்கிகள் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டு அமைந்தவை.
இவை அதிக அளவு ஆற்றலைச் சேமித்து வழங்கக் கூடியவை, எனவே அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த மின்னணுச் சாதனங்களில் இவற்றைப் பயன் படுத்துவதற்கான ஒரு விருப்பத் தேர்வாக இவை அதிகம் விரும்பப் படுகின்றன.