TNPSC Thervupettagam

அதிமுக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள்

January 14 , 2024 320 days 330 0
  • தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) புதிய ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் ஆனது, நுண்ணுயிர்க் கொல்லிப் பயன்பாட்டு நடைமுறைகளில் பொருத்தமான கண்காணிப்பு முயற்சிகளை அதிகமாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • இது குறிப்பிட்ட அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (CIAs) உருவாக்குதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனைக் குறைத்தல் ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
  • ஒட்டுமொத்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளில், மூன்றாம் தலைமுறை நுட்பம் சார்ந்த செஃபாலோஸ்போரின்கள் பொதுவாக பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (33.1 சதவீதம்) வகை ஆகும்.
  • மூன்றாம் தலைமுறை நுட்பம் சார்ந்த செஃபாலோஸ்போரின்கள் உலக சுகாதார அமைப்பின் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (HPCIA) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • செஃப்ட்ரியாக்சோன் உள்ளிட்ட மூன்றாம் தலைமுறை நுட்பம் சார்ந்த செஃபாலோஸ்போரின்கள் இந்திய பால் உற்பத்தித் துறையில் பயன்படுத்தப் படுகின்றன.
  • அமிகாசின் உள்ளிட்ட அமினோகிளைகோசைடுகள் இந்திய கோழி வளர்ப்புத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அல்லது சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • இந்த முக்கிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பரவலான பயன்பாடு ஆனது, உணவுப் பயன்பாட்டிற்கான விலங்குகளின் உற்பத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டிலும் ஏற்படக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்