மத்தியப் பிரதேச மாநில அரசானது புதிய அதியத்மிக் வைபக் துறை (ஆன்மீகத் துறை) அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தற்பொழுதுள்ள பல்வேறு துறைகளை இணைப்பதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய துறையானது அமைக்கப்படவிருக்கிறது.
நாட்டிலேயே முதன்முறையாக முந்தைய மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க அரசினால் உருவாக்கப்பட்ட “ஆனந்த் வைபக்” (மகிழ்ச்சித் துறை) என்ற துறையானது புதிதாக உருவாக்கப்படவுள்ள துறையுடன் இணைக்கப்படவிருக்கிறது.