TNPSC Thervupettagam

அதிவெப்பமான ஆண்டு 2023

January 13 , 2024 188 days 302 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்ற சேவை (C3S) நிறுவனம் ஆனது, 2023 ஆம் ஆண்டு புவியின் வெப்பமான ஆண்டு என்றும், கடந்த 100,000 ஆண்டுகளில் இது உலகின் மிக வெப்பமான ஆண்டு என்றும் அறிவித்தது.
  • மனிதர்கள் அதிக அளவு புதைபடிவ எரிபொருட்களை எரிக்கத் தொடங்குவதற்கு முன்னதாக பதிவான நீண்ட காலச் சராசரியை விட கடந்த ஆண்டு 1.48C வெப்பம் அதிகமாக இருந்தது.
  • கடந்த ஆண்டு ஆனது 2016 ஆம் ஆண்டை- முந்தைய வெப்பமான ஆண்டு - விட 0.17C (0.31F) வெப்பமாக இருந்ததோடு, இது "குறிப்பிடத்தக்க" வித்தியாசத்தில் இந்த அளவை முறியடித்தது.
  • முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் உலகிலேயே அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
  • கடந்த ஆண்டு, வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் செறிவு ஒரு மில்லியனுக்கு 419 பாகங்கள் என்ற மிக உயர்ந்த நிலைக்கு அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்