இந்திய வீரர் இஷான் கிஷான், வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் எடுத்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் அதிவேக இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
கிஷன் வெறும் 126 பந்துகளில் 200 ரன்களை எடுத்தார்.
நியூசிலாந்தின் அமெலியா கெர் கொண்டிருந்த முந்தைய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் சாதனையை இவர் முறியடித்தார்.
கெர் 2018 ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 134 பந்துகளில் அதிக ரன் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 2015 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 138 பந்துகளைச் சந்தித்து, ஆடவர் பிரிவுப் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்தார்.
கிஷானின் இணை- ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோருடன் ஆடவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் இரட்டை சதம் அடிப்பது இது ஒன்பதாவது முறையாகும்.
இந்த சாதனையைப் படைத்த 24 வயது இளைய நபர் இவரே ஆவார்.