TNPSC Thervupettagam

அதிவேக சூரியப் புயல்

July 14 , 2021 1139 days 754 0
  • மணிக்கு 1.6 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ஒரு  சக்திவாய்ந்த அதிவேக சூரியப் புயலானது புவியைத் தாக்கக் கூடும் என நாசாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • சூரியனின் வளிமண்டலத்தில் உருவான இந்த சூரியப் புயலானது புவியின் காந்தப் புலம் நிறைந்த விண்வெளிப் பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இது செயற்கைகோள் சமிஞ்கைகள் மற்றும் தகவல் தொடர்புப் பிணையங்கள் போன்றவற்றைச் சீர்குலைப்பதோடு புவி இடங்காட்டி கருவிகளின் செயல்பாடு, கைபேசி சமிஞ்கைகள் மற்றும் செயற்கைக் கோள் வழி இயங்கும் தொலைக் காட்சிகள் போன்றவற்றின் செயல்பாட்டிலும் இடையூறு ஏற்படுத்தக் கூடும்.
  • மேலும் அது மின் பரிமாற்றத்திலும் தடை ஏற்படுத்தக் கூடும்.
  • இது சூரியனின் வளிமண்டலத்திலிருந்து விண்வெளியினுள் வெளியேற்றப்படும் மின்னூட்டப்பட்ட துகள்களின் ஒரு பெருவெடிப்பு நிகழ்வாகும்.
  • இதுவரை பதிவான மிக சக்தி வாய்ந்த புவிகாந்தப் புயலானது 1859 ஆண்டில் ஏற்பட்ட காரிங்டன் நிகழ்வின் போது ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்