டிஆர்டிஓ அமைப்பானது அதிவேகத் தொழில்நுட்ப செயல்முறை விளக்க வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
இது அதிவேக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஆளில்லா வேகப்பீற்று விசை வானூர்தி செயல்முறை விளக்க விமானமாகும் (unmanned scramjet demonstration aircraft).
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பிறகு உலகில் இது போன்ற ஒரு சோதனையை மேற்கொண்ட நான்காவது நாடு இந்தியா ஆகும்.
இது மீயொலி உயர் வேகம் (Hypersonic speed) எனப்படும் ஒலியின் வேகத்தைவிட 6 மடங்கு வேகத்தில் ஏவுகணைகள் பயணிக்க உதவுகின்றது.
இந்தச் சோதனையானது மீயொலி உயர்வேக ஏவுகணையின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது.
உதவும் பங்காளர்கள்
இஸ்ரேல் காற்று சுரங்க வழிச் சோதனையில் உதவியது.
ரஷ்யாவானது மீயொலி உயர்வேக உந்து விசையின் ஆராய்ச்சியில் உதவி செய்தது.